தெலங்கானா: பத்ரகாளி கோயிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலங்கானா மாநிலம், வாரங்கல்லில் உள்ள வரலாற்றுப் பெருமைவாய்ந்த பத்ரகாளி கோயிலுக்கு சர்வதேச ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைத்துள்ளது. மாநிலத்தில் இந்த அந்தஸ்தைப் பெறும் இரண்டாவது கோயில் இதுவாகும். கடந்த 2018-ம் ஆண்டு யாதகிரிகுட்டாவில் உள்ள லஷ்மி நரசிம்மசுவாமி கோயிலுக்கு ஐஎஸ்ஓ சான்று கிடைத்தது.


Advertisement

image

கோயிலின் சுற்றுப்புறம், சுகாதாரம், பாதுகாப்பு, நிர்வாகம் உள்ளிட்ட பல அம்சங்களின் அடிப்படையில் தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஐஎஸ்ஓ நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற ஹெச்ஒய்எம் என்ற நிறுவனம் கோயிலை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.


Advertisement

image

தரச்சான்று பெற்றதன் மூலம் பத்ரகாளி கோயிலை மேலும் சிறப்பாக நடத்தவேண்டிய பொறுப்பு கூடியுள்ளதாக கோயில் நிர்வாகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கோயிலின் புகழ் பரவுவதற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் உதவியாக இருக்கும்.

 "கர்ப்பிணிகளே நெல்லிக்காய் சாப்பிடுங்கள்"- மருத்துவர் கமலா செல்வராஜ்


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement