இரண்டு முறை மேற்கொண்ட கொரோனா பரிசோதனை முடிவும் நெகட்டிவ் என வந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் பயிற்சிக்கு திரும்பினார்.
நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் சனிக்கிழமை அபுதாபி மைதானத்தில் சிஎஸ்கே - மும்பை இண்டியன்ஸ் ஆட்டத்துடன் தொடங்கியது. இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக இந்த முறை முழுவதும் யுஏஇ-ல் (ஐக்கிய அரபு அமீரகத்தில்) நடைபெற்று வருகிறது. அபுதாபி, ஷர்ஜா மற்றும் துபாய் ஆகிய மூன்று மைதானங்களில் மட்டும் தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளன.
இதனால் சிஎஸ்கே வீரர்கள் கடந்த மாதமே துபாய் சென்றனர். அங்கு அனைத்து அணி வீரர்களும் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் சிஎஸ்கே அணியில் 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதில் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் கொரோனாவிலிருந்து குணமடைந்து மும்பை அணியுடனான போட்டியிலேயே பங்கெடுத்தார்.
ஆனால், மற்றொரு வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தாலும், அவருக்கு கூடுதலாக 2 பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன.
The first thing you wanna see on a Monday morning. Look who's back! ? #Ruturaj #WhistlePodu #Yellove pic.twitter.com/GXYIMs1OBx— Chennai Super Kings (@ChennaiIPL) September 21, 2020
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாடுக்கு நடத்தப்பட்ட இரு முறை கொரோனா சோதனையிலும் அவருக்கு நெகட்டிவ் என வந்தது. இதனையடுத்து வலைப்பயிற்சிக்கு திரும்பினார் ருதுராஜ் கெய்க்வாட். இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருக்கிறது.
Loading More post
அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் - அடுத்தது என்ன?
”அதிமுக டெபாசிட் இழக்கும்; தேமுதிகவுக்கு இன்று தீபாவளி!” - எல்.கே.சுதீஷ்
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்!
‘எங்களைக் காப்பியடிக்கிறார்கள்!’ - திமுகவை கடுமையாக விமர்சிக்கும் கமல்
"தோனியை கேப்டனாக்க பரிந்துரைத்ததே சச்சின்தான்!" - உண்மையை உடைத்த சரத் பவார்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!