பாஜக அரசின் ஆணவம் முழு நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும்: ராகுல் காந்தி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விவசாய மசோதாக்கள் நிறைவேற்றம், எம்.பிக்கள் சஸ்பெண்ட் போன்றவற்றிற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.


Advertisement

’விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகச் சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்திரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம், அத்யாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம்’ ஆகிய மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ‘மாநில உரிமைகளை பறிப்பதாகவும் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும்’ கூறி போராட்டம் செய்து வருகின்றன.

image


Advertisement

இந்நிலையில், இம்மசோதாக்களுக்கு மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எட்டு எதிர்க்கட்சி எம்.பிக்களை ஒருவாரத்திற்கு சஸ்பெண்ட் செய்துள்ளார் வெங்கையா நாயுடு.

இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி ட்விட்டரில் ” மெளனம் சாதிப்பதன் முலமும், பாராளுமன்ற உறுப்பினர்களை இடை நீக்கம் செய்வதன் மூலமும், விவசாயச் சட்டங்கள் குறித்த விவசாயிகளின் கவலைகளை கண்டு கொள்ளாமல் இருப்பதன் மூலமும் இந்த ‘எல்லாம் அறிந்த’ அரசாங்கத்தின் முடிவற்ற ஆணவம் முழு நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தும்” என்று கண்டித்துள்ளார்.


Advertisement

இதையும் படிக்கலாமே... இங்கு யாருமே மேல்சாதி அல்ல: சூரரைப் போற்று பாடலாசிரியர் ஏகாதசி பேட்டி

loading...

Advertisement

Advertisement

Advertisement