திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 28-ம் தேதி திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது


Advertisement

விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய மசோதாக்கள் மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. கடுமையான அமளிக்கு நடுவே இந்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதா விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என பாஜகவினர் கூறினாலும், இது முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு எதிரான மசோதா என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

image


Advertisement

நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 28ம் தேதி திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பட்டம் அறிவித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகவும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

loading...

Advertisement

Advertisement

Advertisement