அதிமுக முன்னாள் நகரமன்ற தலைவரைக் கொல்ல முயற்சி! நூலிழையில் தப்பிய உயிர்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அடுத்த கோலடியை சேர்ந்தவர் மகேந்திரன். அதிமுகவைச் சேர்ந்த இவர் திருவேற்காடு நகராட்சி முன்னாள் நகரமன்ற தலைவராக இருந்தவர். நேற்று இரவு சற்று தொலைவில் இருக்கும் மகளின் வீட்டிற்குச் சென்றுவிட்டு, தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்றுகொண்டிருந்தார். திருவேற்காடு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் லோடு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை இடித்ததில் மகேந்திரன் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். எழுந்திருக்க முயற்சித்தபோது, ஆட்டோவிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் கையில் அரிவாளுடன் இறங்கியுள்ளனர்.


Advertisement

image

அதைக் கண்டதும் நிலைமையை சுதாரித்த மகேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மர்ம நபர்கள் விடாமல் விரட்டிச்சென்று அரிவாளால் வெட்டியதில் மகேந்திரனின் தலையில் லேசான வெட்டுக் காயம் ஏற்பட்டது. சிறிது தூரம் ஓடிய பின்னர் அங்கு அதிகளவில் கூடியிருந்த பொதுமக்களை பார்த்தவுடன் மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர். இதையடுத்து மகேந்திரனை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.


Advertisement

இந்த சம்பவம் குறித்து திருவேற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவேற்காட்டில் முக்கிய பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

இதையும் படிக்க: அடித்து நொறுக்கப்பட்ட எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கார்..! 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement