தொடங்கியது த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பு.. புகைப்படங்களை வெளியிட்ட மோகன்லால்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

த்ரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்புகள் இன்று துவங்கியுள்ளன என்று  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் மோகன்லால்.


Advertisement

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் மாபெரும் வெற்றியையும் வசூல் சாதனையையும் படைத்திருந்தது. மோகன்லால், மீனா, ஆஷா சரத், நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருந்தனர்.

 


Advertisement

image

இப்படத்தின் ரீமேக் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெற்றியடைந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி தமிழிலும் ஹிட் அடித்தது.

இந்நிலையில், த்ரிஷ்யம் 2 படத்தின் அறிவிப்புகள் சமீபத்தில் வெளியாகின. மீனா பிறந்தநாளன்றுகூட விரைவில் த்ரிஷ்யம் 2 படப்பிடிப்பில் சந்திக்கலாம் என்று பதிவிட்டிருந்தார் மோகன்லால்.

image

இந்நிலையில், இன்று த்ரிஷ்யம் 2 படத்தின் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டதையொட்டி பூஜை படங்களை வெளியிட்டுள்ளார் மோகன்லால். த்ரிஷ்யம் 2 படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எகிறிக்கிடக்கின்றன.

இதையும் படிக்கலாமே... முகத்தில் மசாஜ் செய்யும் நத்தை: பிரபலமடையும் புதிய ஃபேஷியல்

loading...

Advertisement

Advertisement

Advertisement