மனக்கசப்பு இல்லை; இதே கூட்டணி தொடரும் - பாஜக தமிழக தலைவர் முருகன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என பாஜக தமிழக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்


Advertisement

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

நமது நாடு விவசாயம் சார்ந்த விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடாக உள்ளது.விவசாய விளை பொருட்களை சந்தைகளுக்கு மட்டுமே கொண்டு சென்று விற்பனை செய்யும் நிலை உள்ளது .இந்த மசோதாவின் பயனாக பல்வேறு பகுதிகளுக்கு விவசாய விளை பொருட்களை எடுத்து சென்று விற்பனை செய்யலாம். ஆன்லைன் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது . விவசாய பொருட்களை அதிக ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது .


Advertisement

image

இந்த சட்டத்தின் மூலம் சேமிப்பு கிடங்குகள் அதிகரிக்கும். இதனால் தரகர்கள் தலையீடு குறையும்.விவசாயம் செய்யும் பகுதியில் இருந்தே பல்வேறு பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக பயனடையலாம்.

விவசாய மக்களை ஒப்பந்தம் செய்வதில் தான் குழப்பம் ஏற்படுத்துகின்றனர், அனைத்து மொழிகளிலும் ஒப்பந்தம் செய்யலாம் , இதன் மூலம் விவசாயம் பெருகும். இந்த சட்டம் விவசாயத்தை ஊக்குவிக்க பயனுள்ளதாக இருக்கும்.


Advertisement

image

 விவசாய விளைபொருட்கள் பதுக்கள் இந்த சட்டத்தின் மூலம் தடுக்கப்படும். இதனால், மதுரை மல்லிகை பூவை டெல்லி முதல் லண்டன் வரை விவசாயி கொண்டு செல்லலாம்.அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் எந்த மனக்கசப்பும் கிடையாது. தற்போது உள்ள அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என தெரிவித்தார்.

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement