மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் எட்டு பேர் சஸ்பெண்ட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மாநிலங்களவையில் விவசாய மசோதாக்களை தாக்கல் செய்தபோது, எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதாவது, அவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதாக எம்பிக்கள் எட்டு பேரை சஸ்பெண்ட் செய்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

விவசாய மசோதாக்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை மீண்டும் கூடியபோது எதிர்ப்புக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேறியது.

image


Advertisement

முன்னதாக நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா மற்றும் விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய மசோதாக்களை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார்.

இந்த விவசாய மசோதாக்கள் மீதான விவாதத்திற்கு பதிலளிப்பதை ஒத்திவைக்கக் கோரி ஆவேசமாக குரல் கொடுத்து அமளியில் ஈடுபட்டனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement