ஐபிஎல் 2020: "ஈ சாலா கப் நம்தே"‌ ஹைதராபாத்தை வென்று சூளூரைக்குமா பெங்களூரு ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

துபாயில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. விராட் கோலி தலைமையிள் பெங்களூரு அணியும், வார்னர் தலைமையில் ஹைதராபாத் அணியும் போட்டிக்கு ஆயத்தமாகி வருகின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பெங்களூரு அணி 6 ஆட்டங்களிலும், ஹைதராபாத் அணி 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.

image


Advertisement

அணியில் உலகத்தர வீரர்களைக் கொண்டிருந்தும் கடந்த 3 ஐபிஎல் சீசன்களாகவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி‌ மிகவும் கவலையளிக்கும் விதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது பெங்களூரு அணி. நடப்பு சீசனில் அந்த அணி எவ்வாறான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சம் பெற்றுள்ளது.‌ பதற்றத்திலேயே போட்டிகளைப் பறிகொடுத்து விடும் பரிதாப அணி இது போன்ற விமர்சனங்களைத் தான் கடந்த 3 சீசன்களாக சந்தித்து வருகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

இன்று பல கடுமையான விமர்சனங்களையும், கேலி கிண்டல்களையும் சந்தித்து வரும் பெங்களூரு அணி 2009 ஆம் ஆண்டு கெவின் பீட்டர்சன் தலைமையிலும், 2011ஆம் ஆண்டு டேனியல் வெட்டோரி தலைமையிலும் இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது. அதன் பின்பு அணியின் தலைமை பொறுப்பை ஏற்றுக் கொண்டார் விராட் கோலி. அவர் பொறுப்பேற்ற முதல் 3 ஆண்டுகளில் பெங்களூரு அணி "ப்ளே ஆஃப்" வரை கூட முன்னேறவில்லை. பின்னர் அணியில் பல மாற்றங்களை மேற்கொண்டு 2015 ஆம் ஆண்டு 3-ஆவது இடத்தை பெற்ற ஆர்.சி.பி, 2016 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறியது.

image


Advertisement

2016 ஆம் ஆண்டுக்குப் பின்பு ஆர்.சி.பி அணிக்கு பெரும் ஏமாற்றமே. கடந்த 3 சீசன்களில் புள்ளிகள் பட்டியலில் அந்த அணி பிடித்த அதிகபட்ச இடமே 6 தான். பல முத்திரை பதித்த வீரர்களை அணியில் கொண்டிருந்தும் கோப்பையை ஒரு முறை கூட தங்கள் அணி பெறவில்லை என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாகவே உள்ளது. ஏமாற்றங்களால் துவண்ட ஆர்.சி.பி. அணி, இந்தாண்டு தொடரில் தடம் பதிக்க ஐபிஎல் ஏலத்தில் இருந்தே அதற்கான முனைப்பை காட்ட தொடங்கியது.

எவ்வளவு ரன்களைக் குவித்தாலும் பந்துவீச்சாளர்கள் வாரி வழங்கி விடுவார்கள் என்ற விமர்சனம் ஆர்.சி.பி மீது நீண்ட காலமாக உள்ளது. இதனைக் களைய கிறிஸ்மோரிஸ் மற்றும் கேன் ரிச்சர்ட்ஸ்சன் ஆகியோரை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளது. அவர்களுக்கு வலுசேர்க்க வேகப்புயல்கள் ஸ்டெய்ன், சைனி, உமேஷ் யாதவ் ஆகியோரும் அணியில் உள்ளனர். பேட்டிங்கில் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்து கோலி மற்றும் டிவில்லியர்ஸ்க்கு பலம் சேர்க்க இருபது ஓவர் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்துள்ள ஆரோன் ஃபின்ச்சையும் ஒப்பந்தம் செய்து வைத்துள்ளது.

image

மத்திய வரிசையில் மோயின் அலி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும், சுழற்பந்தில் சஹாலும் அணிக்கு கைகொடுப்பார்கள் என நம்பப்படுகிறது. நடப்பாண்டு தொடரில் வாகை சூடி, கடந்த 3 சீசன்களாக வாரி இறைக்கப்பட்ட விமர்சனங்களை விளாசி, அணியின் சூளுரையான 'ஈ சாலா கப் நம்தே' வை ஓங்கி ஒலிக்க வைக்குமா கோலியின் படை என ஆர்.சி.பி. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement