“பெரியார் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை நாங்கள் ஆதரிக்கிறோம்” - எல்.முருகன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பெரியார் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை நாங்கள் ஆதரிக்கிறோம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


Advertisement

மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த வாரம் முழுவதும் சேவை வாரமாக அறிவித்து அதனை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பாஜகவின் மாநில தலைவர் எல்.முருகன் பயணம் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் எல்.முருகன் பங்கேற்றார்.

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்: ஜே.பி.நட்டா அறிவிப்பு | L Murugan  to be appointed as BJP state president in Tamil Nadu, - hindutamil.in


Advertisement

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் “பெரியார் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை நாங்கள் ஆதரிக்கிறோம். அவரின் கடவுள் மறுப்புக் கொள்கையை மட்டும் எதிர்க்கிறோம். ரஜினி முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். அதற்குப் பிறகு கூட்டணி பற்றி பேசலாம். பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை தமிழக அரசு முறையாக விசாரித்து வருகிறது” எனத் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement