‘சச்சின், கோலியை விட தோனிக்கே புகழ் அதிகம்’ - கவாஸ்கர் பெருமிதம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் சச்சின், கோலியை விட தோனிக்கே அதிக புகழ் உள்ளதாக சுனில் கவாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது. இந்த வெற்றி தோனியின் சிறப்பான கேப்டன்ஷிப்பை மீண்டும் நிரூபித்துள்ளது.

image


Advertisement

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வர்ணனை செய்வதற்காக அங்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், இந்தியாவில்  சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராத் கோலியை தாண்டி தோனியின் புகழ் உச்சத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரை எடுத்துக் கொண்டால், மும்பை மற்றும் கொல்கத்தாவில் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளதாகவும் இதேபோல கோலிக்கு டெல்லி மற்றும் பெங்களூருவில் அதிக ரசிகர்கள் உள்ளதாகவும் குறிப்பிட்ட கவாஸ்கர், ஆனால் தோனிக்கு இந்தியா முழுவதிலும் ரசிகர்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய ரசிகர்கள் அனைவருக்கும் தோனியை மிகவும் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

loading...

Advertisement

Advertisement

Advertisement