திருப்பதியில் மத உறுதி பத்திர கையெழுத்து முறை ரத்தாகிறது?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்று மதத்தினர் உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து போடாமல் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வேற்று மதத்தவர்கள் வரும்போது உண்மையான பக்தியுடன் தரிசனத்திற்கு செல்வதாக உறுதி கூறும் மத உறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே உள்ளே செல்ல முடியும் சந்திரபாபு முதல்வராக இருந்தபோது,  இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராக இருந்த காலத்திலும் அவர் கையெழுத்திட்ட பின்பே தரிசனத்திற்கு சென்றார் என சொல்லப்படுகிறது. தற்போது இந்த முறையை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏழுமலையான் மீது உண்மையான பக்தி கொண்ட வேற்று மதத்தவர்கள் மட்டுமே தரிசனத்திற்காக வரும் நிலையில் அவர்களிடம் மத உறுதி பத்திரத்தில் கையெழுத்து பெறுவது தேவையில்லாதது. அது அவர்களின் பக்தியை குறை கூறுவதாக அமைகிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.


Advertisement

இதையடுத்து மத உறுதி பத்திர முறையை ரத்து செய்யும் வகையில் தேவஸ்தானம் வழிவகையை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Courtesy: https://bangaloremirror.indiatimes.com/news/india/tirupati-balaji-temple-reverses-its-own-rule-for-non-hindu-visitors-says-faith-declaration-not-needed/articleshow/78206747.cms

loading...

Advertisement

Advertisement

Advertisement