"தோனி ஒரு ஜீனியஸ்" சாம் கரன் நெகிழ்ச்சி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


தோனி ஒரு ஜீனியஸ் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


Advertisement

அபுதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து களம் இறங்கிய மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. இதனை தொடர்ந்து 163 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய சென்னை அணியின் வாட்சன் 4 ரன்களிலும், விஜய் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

image


Advertisement

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டூ பிளசி, ராயுடு கூட்டணி அணியைச் சரிவிலிருந்து மீட்டது. ஒரு கட்டத்தில் அதிரடியைக் கையில் எடுத்த ராயுடு 71 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜடேஜா 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் களமிறக்கப்பட்ட சென்னை அணியின் கடைக்குட்டி சிங்கம் சாம் கரண் ஆறே பந்துகளில் 18 ரன்களை விளாசி வெற்றி விளிம்பில் ஆட்டமிழந்தார். 4 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயெ வெற்றி இலக்கை கடந்தது சென்னை அணி. இதன் மூலம் சி.எஸ்.கே. கேப்டனாக தோனி 100 ஆவது வெற்றியைப் பதிவு செய்தார்.

இந்நிலையில் போட்டி முடிந்த பின்னர் பேசிய சாம் கரண் “ நான் சென்னை வந்தவுடன் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் நிறைய வீரர்களை சந்திக்க வில்லை. அதைப் பற்றி நான் அதிகமாகவும் சிந்திக்கவில்லை. இரண்டு நாடுகளுக்கு முன் சென்னை வந்து இறங்கிய உடன், நேராக தோனியைச் சந்தித்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையாகச் சொல்கிறேன் அவர் ஒரு ஜீனியஸ். களத்தில் ஒரு பக்கம் இடது கை பேட்ஸ்மேனும், மற்றொரு பக்கம் வலது கை பேட்ஸ்மேனும் நின்றோம். அடித்தால் சிக்ஸ் அல்லது அவுட் என்ற கணக்கையே நாங்கள் டார்க்கெட் செய்ய நினைத்தோம்” என்றார்.

https://www.iplt20.com/video/206850/i-was-surprised-to-bat-ahead-of-ms-dhoni-sam-curran?tagNames=indian-premier-league,Latest


Advertisement

 

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement