எவ்வளவு அழகானவர்: தோனி குறித்து சாக்‌ஷி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற தோனி உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்துக்கு பின்பு 437 நாட்களுக்குப்பிறகு மீண்டும் நேற்று விளையாட வந்திருப்பதை திரையில் கண்ட சாக்‌ஷி ‘எவ்வளவு அழகானவர்” என்று பூரிப்பில் பதிவிட்டுள்ளார்


Advertisement

கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் உலக்கோப்பை போட்டியில் நியூசிலாந்துடனான அரையிறுதிப் போட்டியில் 50 ரன்களில் ரன் அவுட் ஆகி அதிர்ச்சியூட்டிய தோனி அதன் பின்பு சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. பின்பு கடந்த மாதம் 15 ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார். 

image


Advertisement

அதிலிருந்து கிரிக்கெட் விளையாடமால் இருந்தவர், மீண்டும் 437 நாட்களுக்குப் பிறகு ஐ.பி.எல் மூலம் மீண்டும் விளையாட வந்துள்ளது குறித்து தோனி மனைவி சாக்‌ஷி பூரிப்போடு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “எவ்வளவு அழகானவர்” என்று மகிழ்ச்சியில் பதிவிட்டுள்ளார்.

 image

கடந்த ஆண்டு ஜூலை முதல் விளையாடமால் இருந்த தோனி இந்த ஆண்டு துவக்கத்தில் ஐ.பி.எல் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் விதமாக சிஎஸ்கேவின் பயிற்சியில் பங்கேற்றுக்கொண்டார். இந்நிலையில், கொரோனாவால் ஐ.பி.எல் போட்டிகள் தடைப்பட்டிருந்தது சூழலில் மீண்டும் தற்போது துவங்கியிருப்பதால், ரசிகர்கள் மட்டுமல்ல சாக்‌ஷியும் தோனியை களத்தில் காண ஆர்வமுடன் இருந்தார்.


Advertisement

image

அவர் எதிர்பார்த்ததுப் போலவே சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு தலைமையேற்ற தோனி முதல் போட்டியிலேயே மும்பை இந்தியன் அணியை வீழ்த்தியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement