‘நாங்கெல்லாம் ரிட்டையர்டு ஆனவங்க’  தோனியின் நச் கமெண்ட்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அபுதாபியில் நடந்த 13-வது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.


Advertisement

போட்டி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ்.தோனி கூறுகையில், ‘’இது மிகவும் வித்தியாசமானது. போட்டிக்கு பிந்தைய நிகழ்ச்சியைப் போல உணரவில்லை. ஒட்டுமொத்த வீரர்களும் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு நாங்கள் சிறப்பாக விளையாடினோம் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

image


Advertisement

இன்றையப் போட்டியில் சூழ்நிலைக்கு ஏற்றப்படி எப்படி பந்து வீசுவது என்பதை அறிய நாங்கள் நேரம் எடுத்ததாக உணர்ந்தேன். மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் நன்றாக பேட் செய்தனர். அவர்களால் அழுத்தம் கொடுக்க முடிந்தது. ஒட்டுமொத்தமாக ஏராளமான நல்ல விஷயங்கள் இருந்தன. ஆனால் எங்களை இன்னும் சில பகுதிகளில் மேம்படுத்த வேண்டியுள்ளது.

image

குறிப்பாக இரண்டாவதாக பேட் செய்தால், பனி வரும் வரை பந்து ஸ்விங் ஆகும் என்பதை உணர வேண்டும். இது கற்கவேண்டிய முக்கியமான பாடம். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது எல்லோருக்கும் மிகச்சிறந்த ஆட்டமாக இப்போட்டி இருந்தது. யாருக்கும் காயமில்லை.


Advertisement

அணியில் பெரும்பாலோர் ஓய்வுப் பெற்றவர்கள். ஆனால் இளைஞர்கள் மற்றும் அனுபவத்தின் நல்ல கலவை தேவை. ஐபிஎல்லில் இளம் வீரர்களுக்கு உண்மையில் உதவுவது என்னவென்றால், 60-70 நாட்களுக்கு வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மூத்த வீரர்களுடன் விளையாடுவதுதான் ’’ என்றார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement