கொரோனா: சிறப்பு ரயில்களில் பயணித்தவர்களின்  இறப்பு எண்ணிக்கையை வெளியிட்ட மத்திய அரசு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொதுமுடக்க காலத்தில் இறந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளை பராமரிக்காததால் கடும் விமர்சனங்களை  எதிர்கொண்ட  மத்திய அரசு இப்போது  ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் இறந்தவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது


Advertisement

image

திரிணாமுல் காங்கிரஸ்  நாடாளுமன்ற உறுப்பினர் டெரெக் ஓ பிரையன் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், “மாநில காவல்துறை வழங்கிய தரவுகளின் அடிப்படையில், ஷ்ராமிக்  ரயில்களில்  பயணம் செய்யும் போது  97 பேர்  09.09.2020 வரை இறந்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 87  பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்கு மாநில காவல்துறையினர் அனுப்பியுள்ளனர்.


Advertisement

இறந்த 51 பேரின்  பிரேத பரிசோதனை அறிக்கையின்படி  இருதய அடைப்பு , இதய நோய் , மூளை இரத்தக்கசிவு , முன்பே இருக்கும் நாட்பட்ட நோய் , நாள்பட்ட நுரையீரல் நோய் , நாள்பட்ட கல்லீரல் நோய் போன்றவை மரணங்களுக்கு காரணமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில காவல்துறை இயற்கைக்கு மாறான இறப்பு வழக்குகளில் Cr.PC இன் பிரிவு 174 இன் கீழ் வழக்கை பதிவுசெய்கிறது, மேலும் சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுகிறது" என்று அமைச்சர் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில், மத்திய தொழிலாளர் மந்திரி சந்தோஷ் கங்வார் மக்களவையில் “மார்ச் மாதத்தில் நாடு தழுவிய  பொதுமுடக்கத்திற்கு பின்னர்  நாடுமுழுவதிலுமிருந்து  சொந்த ஊர்களுக்கு திரும்பும் போது இறந்த அல்லது காயமடைந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை”என்று தெரிவித்தார்.

 “உலகமே புலம் பெயர் தொழிலாளர்களின் இறப்புகளைக் கண்டது, ஆனால் மோடி அரசாங்கத்திற்கு மட்டுமே  அது தெரியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதனை கண்டித்தார்.


Advertisement

 image

பொதுமுடக்க காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பினர். சிலர் பலநூறு கிலோமீட்டர்கள்  நடந்து,  அவர்களின் கிராமங்களை அடைய கடினமான பயணத்தை மேற்கொண்டனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கஷ்டத்தைத் தணிப்பதற்காக, இந்திய ரயில்வே மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கத் தொடங்கியது. ரயில்வே அமைச்சகத்தின் தகவல்களின்படி, மே 1 முதல் ஆகஸ்ட் 31 வரை மொத்தம் 4,621 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு, 6,319,000 பயணிகளை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துசெல்லப்பட்டனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement