என் உடலை உறுதி செய்த மாஸ்டருக்கு நன்றி: நடிகர் சூரி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஊக்கப்படுத்தும் தனது பயிற்சியாளருக்கு நடிகர் சூரி நன்றி தெரிவித்துள்ளார்.


Advertisement

நடிகர் சூரி சுசீந்திரனின் ’வெண்ணிலா கபடிக்குழு’ படம் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரானார். தொடர்ச்சியாக, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களின் நண்பராக காமெடியில் கலக்கி வருகிறார்.

image


Advertisement

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் ’சீமராஜா’ படத்தில் தமிழ் காமெடி நடிகர்களில் முதன்முறையாக சிக்ஸ் பேக் வைத்து எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தார். பொதுவாக ஹீரோக்கள்தான் உடலை ஃபிட்னசாக வைத்திருப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், சூரி அப்படியல்ல. எப்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக மாறினாரோ அப்போதிலிருந்தே உடற்பயிற்சிகள் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த ஆர்வம்தான் முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவும் வைத்துள்ளது.

image

(சூரி உடற்பயிற்சியாளர் சரவணன்)


Advertisement

இந்நிலையில் நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ”எனது உடற்பயிற்சிக்கான உந்துதல் எனது மாஸ்டர்தான். என் உடலை உறுதி செய்த மாஸ்டர் சரவணனுக்கு நன்றி” என்று தனது ஃபிட்டான புகைப்படத்துடன் நன்றியுணர்வோடு பதிவிட்டுள்ளார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement