ஆட்டம் முடியும்.. ஆறுமாதத்தில் விடியும்: மு.க.ஸ்டாலின்

tamilnadu-cm-rule-will-end-in-six-months-M-K-Stalin

ஆவேசக் குரல் எழுப்பி, அட்டைக்கத்தி சுழற்றும் நாடகம் அதிக காலம் நீடிக்காது. ஆட்டம் முடியும் ஆறுமாதத்தில் விடியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

image

மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் விவாதிக்காமல் நீட்டை தமிழகத்துக்குள் நுழைத்த தமிழக முதல்வர் சட்டப்பேரவையில், அட்டைக் கத்தி சுழற்றுகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “மூன்று நாட்கள் மட்டுமே கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுக கோரிய ஆரோக்கியமான விவாதங்கள் நடந்தனவா? ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரம், முதலீட்டாளர் மாநாடுகள், முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்கள் ஈர்த்த முதலீடுகள், உருவான வேலைவாய்ப்புகள் எவ்வளவு என்று விவாதிக்கவில்லை.

ஜல்ஜீவன் மிஷன் திட்ட முறைகேடுகள், ஊராட்சி மன்றங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்காதது, மத்திய அரசு மாநிலங்களுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி பாக்கி, மாநில அரசின் கடன்சுமை 4.56 இலட்சம் கோடி இதனைப்பற்றியும் விவாதிக்கவில்லை. நீட் தேர்வு பற்றியும் விவாதம் இல்லை. டெல்டா பகுதிகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் தொடர்கின்றன, பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமான திருவாரூரில் எண்ணெய் கிணறுகள் அமைக்க 2023 ஆம் ஆண்டுவரை மத்திய அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. விவசாயி வேசம் போடும் முதல்வர் இதுபற்றி வாய் திறக்கவில்லை.

அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி ஊக்குவிப்பு சட்டம், வேளாண் சேவைகள் திருத்த சட்டம் ஆகிய விவசாயிகளின் வாழ்வுக்கு எதிரான சட்டங்களை நாடாளுமன்றத்தில் பாராட்டி ஆதரித்துள்ளது பழனிசாமி அரசு. முதுநிலை அடிப்படையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பணி வழங்காதது பற்றியும் பேரவையில் விவாதிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement