கொலை வழக்கில் சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

Police-inspector-involved-in-murder-case-transferred-to-Armed-Forces

தூத்துக்குடி அருகே இளைஞரை அடித்துக் கொன்றதாக கொலை வழக்கு பதியப்பட்ட இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


Advertisement

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 17-ம் தேதி செல்வன் என்ற இளைஞரை நிலத்தகராறில் அடித்துக் கொலை செய்தது தொடர்பாக, தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட மேலும் சிலர் மீது கொலை வழக்குப் பதியப்பட்டது.

இந்நிலையில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். ஹரி கிருஷ்ணன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் ‘புதிய தலைமுறை’க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement