காஞ்சிபுரத்தில் நெசவாளர் தற்கொலை: மகளின் படிப்புக்கு கட்டணம் செலுத்த முடியாததால் விரக்தி?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தன் மகளின் கல்விச் செலவுக்கு பணம் கட்ட முடியாத காரணத்தினால் மனமுடைந்த நெசவாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


Advertisement

காஞ்சிபுரம் நகரில் அரசு மற்றும் தனியார் பட்டு ஜவுளி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு தினந்தோறும் ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பட்டு சேலை வாங்கிச் செல்வது வழக்கம். காஞ்சிபுரம் காமராஜ் சாலை, நடுத்தெரு, காந்திரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் கடைகளில் முகூர்த்த நாட்கள் மற்றும் சாதாரண நாட்களில் கோடிக்கணக்கில் பட்டு வர்த்தகம் நடைபெறும்.

ஆனால் கொரோனாத் தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் தற்போது அங்கு பட்டு வர்த்தகம் தடைப்பட்டு நிற்கிறது. அரசு தளர்வுகளை அறிவித்த போது அச்சத்தின் காரணமாக காஞ்சிபுரத்திற்கு வரும் வெளிமாநில வியாபாரிகள், பொதுமக்களின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்ததால் பட்டுச் சேலை விற்பனை கடைகள் முழுவதும் வெறிச்சோடி கிடக்கின்றன. இதன் காரணமாக கைத்தறி தொழிலும் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில் அவர்களின் மாத வருமானம் பத்தாயிரத்துக்கும் கீழே இறங்கியுள்ளது. இந்நிலையில் அங்கு வசித்து வந்த நெசவாளர் சங்கர் என்பவர், அவர் தறி நெய்யும் இடத்திலேயே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


Advertisement

image

கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகச் சொல்லப்படும் சங்கர் என்பவரின் மகன் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் அவரும் பணிக்குச் செல்ல முடியாமல் போனது. இதனால் ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக அவரது மகளின் கல்வி கட்டணத்தையும் சங்கரால் செலுத்த முடியவில்லை எனத் தெரிகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலில் இருந்த சங்கர் தான் தறி நெய்யும் இடத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image


Advertisement

இது குறித்து உயிரிழந்த சங்கரின் மகன் கூறும் போது “கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக எனது தந்தை எந்தவொரு வேலைக்கும் செல்லாமல் மிகுந்த மன உளைச்சலில் காணப்பட்டார். எனது அண்ணனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரும் பணிக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை சமாளிக்க, அதிக அளவு கடன் வாங்கினார். அதனை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.”என்றார்

சங்கரின் உறவினர் மணி கூறும் போது “ அதீத வறுமையில் தவித்து வந்த சங்கர், மகளின் கல்லூரி படிப்பிற்கு பணம் கட்ட முடியாததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். வாங்கிய கடனை திருப்பி தர முடியாததால், வேறு யாரிடமும் அவரால் கடனும் வாங்க இயலாததால் அவர் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டார். அவரின் தற்கொலை முடிவு எங்களுக்கு அதிர்ச்சியை ஏறடுத்தியுள்ளது.”என்றார்.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement