இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மீண்டும் மோதல்? அதிமுக அவசர கூட்டத்தில் நடந்தது என்ன?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அதிமுக அவசர ஆலோசனை கூட்டத்தில் வழிகாட்டுதல் குழு அமைக்கும் விவகாரத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ்  தரப்பினருக்கிடையே கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

சென்னை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தில், வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வலியுறுத்திய நிலையில், அமைக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே கட்சியின் செயற்குழு வருகிற 28-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் நகர்வுகள் விறுவிறுப்படைந்துள்ளன. ஜெயலிலதா இல்லாத நிலையில், ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகிறது ஆளும் அஇஅதிமுக.


Advertisement

image

யார் முதல்வர் வேட்பாளர்? இந்த ஒற்றை கேள்விதான் அதிமுகவில் பிரதானமாக இருக்கும் நிலையில், சென்னை ராயப்பேட்டை அலுவலகத்தில் கட்சியின் உயர்நிலைக் கூட்டம் கூடியது.

முதல்வரையும், துணை முதல்வரையும் தனித்தனியே முன்னிலைப்படுத்தி சுவரொட்டிகள் மூலம் தங்கள் விருப்பத்தை ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்த தொண்டர்கள், கட்சி அலுவலகத்திலும் இருவருக்கும் ஆதரவாக தனித்தனியே முழக்கங்களை எழுப்பினர்.


Advertisement

ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, "ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு" என்றும், எடப்பாடி பழனிசாமி வந்தபோது, "நிரந்தர முதலமைச்சர் எடப்படியார்" என்றும் முழக்கங்கள் எழுந்தன.

கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசித்ததாக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அறிக்கை வெளியிட்டாலும், ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில் காரசார விவாதங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியில் முதலமைச்சர் தரப்பினர் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இணைப்பின்போது ஒப்புக்கொண்ட 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

image

அதேநேரத்தில் வழிகாட்டுதல் குழுவை அமைக்க முடியாது என முதலமைச்சர் தரப்பினர் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது. வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டால் கட்சியில் மேலும் சில பிரச்னைகள் உருவாகும் என்றும், குழுவில் யாரை சேர்ப்பது யாரை விடுவது என்ற குழப்பம் உருவாகும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறியதாகவும் தெரிகிறது.

11 பேர் கொண்ட குழுவில் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை தெரிவித்தால் என்ன முடிவை எடுக்க முடியும் என்ற குழப்பம் ஏற்படும் என முதலமைச்சர் தரப்பு விளக்கம் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், ஒரு சில சமூகத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் கூறியதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் செயற்குழுவைக்கூட்டி முடிவு எடுக்கலாம் என தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகிற 28 ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கட்சி அலுவலகத்தில், அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர்.-க்கு பிறகு, கடந்த 2016 ஆண்டு ஆட்சியை தக்கவைத்த முதல்வர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றார். அவர் மறைந்த நிலையில், தொடர்ந்து அதிமுக ஆட்சி தக்கவைக்குமா? அதற்கு 28 ஆம் தேதி நடைபெறும் செயற்குழு முக்கிய பதில் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

loading...

Advertisement

Advertisement

Advertisement