தாக்குதல் நடத்த சதி.. கேரளா, மேற்குவங்கத்தில் 9 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது!

NIA-busts-alQaeda-terror-module-in-West-Bengal-Kerala-arrests-9-operatives-with-incriminating-materials

கேரளா, மேற்குவங்கத்தில் நடத்திய சோதனையில் 9 அல்கொய்தா தீவிரவாதிகளை கைது செய்துள்ளது என்.ஐ.ஏ


Advertisement

தேசிய புலானாய்வு முகமை அதிகாரிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மற்றும் கேரளாவின் எர்ணாகுளம் ஆகிய இடங்களில் இருந்து 9 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 6 பேர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 3 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் என்ஏஐ தெரிவித்துள்ளது.  

image


Advertisement

முதற்கட்ட விசாரணையின்படி, இந்த நபர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அல்கொய்தா பயங்கரவாதிகளால் தூண்டப்பட்டவர்கள் என்றும் மற்றும் தலைநகர் டெல்லி உட்பட பல இடங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது மற்றும் டெல்லிக்கு பயணம் செய்ய ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வாங்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கைது மூலம் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் முன்கூட்டியே தடுக்கப்பட்டு விட்டதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement