வெற்றியுடன் தொடங்குமா "ஹிட்மேனின்" மும்பை இண்டியன்ஸ் ?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக முறை பட்டம் வென்றுள்ள அணி. கடைசி 7 தொடர்களில் 4 முறை சாம்பியன். நடப்பு சீசனிலும் கோப்பையை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அணிகளில் முன்னிலையில் இருக்கிறது மும்பை இண்டியன்ஸ்.


Advertisement

image

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்களில் ‌ 3-ஆவது இடத்தில் உள்ள ரோகித் ஷர்மாவும், முந்தைய சீசனில் மும்பை‌ அணியில் அதிக ரன்கள் விளாசிய குயின்டன் டி காக்கும், தொடக்க வீரர்களாக மீண்டும் அதிரடி காட்ட காத்திருக்கின்றனர். தொடக்க ஆட்டக்காரராக மட்டுமன்றி விக்கெட் கீப்பராகவும் மும்பை அணிக்கு பலம் கொடுப்பவர் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த டி காக்.


Advertisement

மத்திய வரிசையில் சூர்ய குமார் யாதவ் , இசான் கிஷன் கை கொடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வல்லமை பெற்றுள்ள ஆல்ரவுண்டர்களுக்கு மும்பையில் அணியில் பஞ்சமில்லை. மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த பொல்லார்டு உடன்‌ பாண்ட்யா சகோதரர்கள் பலம் சேர்க்க காத்திருக்கின்றனர்.

image

பவர் பிளே மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு‌, எதிரணி வீரர்களின் அதிரடிக்கு அணைபோடும் அனுபவம் கொண்ட ஜஸ்பிரித் பும்ரா, டிரெண்ட் பவுல்ட் ஆகியோர் பந்துவீச்சில் ‌பலம் சேர்க்கின்றனர். யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா விலகல், அணிக்கு சறுக்கலை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது.சுழலுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடிய அமீரக மைதானங்களில், பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது மும்பை அணிக்கு பலவீனமாகவே பார்க்கப்படுகிறது.


Advertisement

2014 ஆம் ஆண்டு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில், ‌5 ஆட்டங்களில் விளையாடிய மும்பை அணி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அமீரகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களம் காண்கிறது மும்பை இண்டியன்ஸ்.

loading...

Advertisement

Advertisement

Advertisement