சென்னை அம்பத்தூர் அருகே பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவில் வைக்கப்பட்ட கேஸ் பலூன்கள் வெடித்து விபத்து ஏற்பட்டது.
சென்னை அம்பத்தூர் அருகேயுள்ள பாடியில் பாஜக விவசாய அணி சார்பில், பிரதமர் மோடிக்கு பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இரண்டாயிரம் கேஸ் பலூன்களை பறக்கவிட திட்டமிடப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அங்குவந்த விவசாய அணியின் துணைத் தலைவர் முத்துராமனை வரவேற்று பட்டாசு வெடிக்கப்பட்டது. அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி, அங்கிருந்த கேஸ் நிரப்பிய பலூன்கள் மீது பட்டு வெடித்து சிதறியது.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அனைவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டது. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பலூன்கள் வெடித்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்ச்சி நடத்துவது குறித்து எந்தவொரு அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
Loading More post
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு