ஜார்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கிற உரு பார்திஹ் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி இன்று தகவல் கிடைத்த போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்துள்ளனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்தவர் டெடார் டோலி கிராமத்தைச் சேர்ந்த பராஸ் பன்னா என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறி கால்பந்து போட்டிகளை எவ்வாறு ஏற்பாடு செய்தார்கள் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து பேசிய துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி குல்தீப் குமார் கூறுகையில், நேமான் குஜுர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் மழைவரும்போது நடைபெற்றதால், ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.
ஐந்து பேரையும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்ற நான்கு பேருக்கும் காயங்கள் ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் யார் என்பதை கண்டுபிடித்து விசாரித்தால் விவரம் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் ஒரு எட்டு வயது சிறுவன் மின்னல் தாக்கி இறந்ததாகவும், ஜார்கண்ட் மாநிலத்தில் 2019லிருந்து இதுவரை 334 பேர் மின்னல் தாக்கி இறந்ததாகவும், தேசிய குற்றப்பிரிவு பதிவு பணியகம் தெரிவித்துள்ளது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்