மதுரை: மின் இணைப்பை சரிசெய்த போது மின்சாரம் தாக்கி தற்காலிக ஊழியர் உயிரிழப்பு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை பாலமேடு அருகே மின் கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்த ஊழியர் மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே உயிரிழந்தார். 


Advertisement

 

 


Advertisement

image


மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் தற்காலிக பணியாளராக மின்சார வாரியத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் மின் கம்பத்தில் ஏறி இணைப்பை சரி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மின் கம்பத்திலேயே மயங்கிய நிலையில் கிடந்தார்.


உடனடியாக மின் இணைப்பை துண்டித்த மின்வாரிய அதிகாரிகள் சிலம்பரசனின் உடலை மீட்டு அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்து போது சிலம்பரசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.


Advertisement

 

 

image


இதனையடுத்து உடலை உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மதுரை பாலமேடு போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

loading...

Advertisement

Advertisement

Advertisement