சூர்யாவிற்கு ஆதரவாக போஸ்டர்... ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சூர்யா ரசிகர்கள் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கை பெரும் பரபரப்பையும் அதிக கவனத்தையும் பெற்றது. இதையடுத்து சூர்யாவிற்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
image
 
மேலும் சூர்யாவின் ரசிகர்களால் அவரது  அறிக்கையில் உள்ள வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது. இதேபோல் தென்காசியில் உள்ள தென்காசி ஒன்றிய தலைமை சூர்யா நற்பணி மன்ற இயக்கம் சார்பில் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் சுவர்களில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
 
இந்நிலையில் உரிய அனுமதி இன்றி போஸ்டர் ஒட்டியதாக தென்காசி ஒன்றிய தலைமை சூர்யா நற்பணி மன்ற இயக்க நிர்வாகிகள் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
loading...

Advertisement

Advertisement

Advertisement