“விவசாயியின் மகளாக நிற்பதிலேயே பெருமை”- முடிவுக்கு வருகிறதா பாஜக- சிரோமணி அகாலி தள கூட்டணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விவசாய மசோதா தாக்கல் குறித்த பிரச்னையால் பாஜக மற்றும் சிரோமணி அகாலி தள கட்சியின் 23 வருட கூட்டணியில் விரிசல் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement

 

விவசாயிகளின் விளைபொருட்கள் வர்த்தக மசோதா, விவசாயிகள் பாதுகாப்பு மசோதா, விளைபொருள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மசோதா ஆகிய மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. இம்மசோதாக்கள் உண்மையில் விவசாயிகளுக்கு ஆபத்தை விளைவிப்பவை என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிரோமணி அகாலி தள கட்சியும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.


Advertisement

image

மக்களவையில் மசோதா குறித்த விவாதத்தின் மீது பேசிய சிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல், வேளாண் துறையை கட்டமைப்பதற்காக பஞ்சாபில் கடந்த 50 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட கடின உழைப்பை, இம்மசோதாக்கள் அழித்துவிடும் என விமர்சித்தார். மேலும், மசோதாக்களை திரும்ப பெறாவிட்டால் உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருக்கும் தனது கட்சியை சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பதவி விலகுவார் என்றும் எச்சரித்திருந்தார். அதன்படி, ஹர்சிம்ரத் கவுர், அமைச்சர் பதவி விலகல் கடிதத்தை பிரதமர் அலுவலகத்தில் வழங்கினார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஹர்சிம்ரத் கவுர், விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது அமைச்சர் பதவியினை ராஜினாமா செய்வதாகவும், விவசாயிகளின் சகோதரியாகவும், மகளாக அவர்களுடன் நிற்பதில் தான் பெருமை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Advertisement

image

சிரோமணி அகாலி தள கட்சியானது, பாஜக கட்சியுடன் நீண்ட காலம் கூட்டணியில் இருந்துள்ளது. 1969-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்த கட்சியானது அதன் பின்னர் 1997-ஆம் ஆண்டு நடந்த மாவட்ட அளவிலான தேர்தலில் கூட்டணி வைத்தது. அதன் பின்னர் பாஜக கூட்டணியில் மிக முக்கிய கட்சியாக உருவெடுத்த சிரோமணி அகாலி தள கட்சியானது 2020 வரை கூட்டணியில் தொடர்கிறது.

ஒருவேளை அக்கட்சி கூட்டணியில் இருந்து விலகினால் மக்களவையில் பாஜக கட்சியின் பலத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றே சொல்லப்படுகிறது. தற்போது 303 எம்.பிக்களைப் பெற்றுள்ள பாஜக கட்சியானது மக்களவையில் பெரிய கட்சியாகவே இருக்கிறது.

 

loading...

Advertisement

Advertisement

Advertisement