தோனிக்கு தங்கநிற தொப்பியை வழங்கிய சிஎஸ்கே !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு தங்கநிற தொப்பியை வழங்கி அணியின் நிர்வாகிகள் கவுரவித்தனர்.


Advertisement

image

இந்தாண்டுக்கான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே மோதுகிறது. முதல் போட்டி அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியை சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதற்கு, தோனி கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்குவதே காரணம்.


Advertisement

image

சிஎஸ்கே அணி துபாய் சென்றதில் தொடங்கி இப்போது வரை வலைப்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு புகைப்படங்களை நிர்வாகத்தினர் தொடர்ந்து பகிர்ந்து வந்தனர். முதல் போட்டி நாளை தொடங்க இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணியினருக்கு சிறப்பு இரவு விருந்தும், பரிசுகளும் நேற்று வழங்கப்பட்டது. அவ்விழாவில் கேப்டன் தோனிக்கு தங்கநிற தொப்பியை நிர்வாகத்தினர் பரிசாக வழங்கினர். தோனிக்கு மட்டுமல்லாமல் அணியின் மற்ற வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

அதில் வாட்சன், ஜடேஜா ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் சிஎஸ்கே தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கும் கவுரவிக்கப்பட்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement