"மும்பை அணியின் ஆடும் லெவன் இதுதான்" சுனில் கவாஸ்கரின் கணிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், அவர் கணித்துள்ள மும்பை ப்ளேயிங் வெலவன் அணியின் பலவீனங்கள் குறித்து பேசியுள்ளார். 


Advertisement

பேட்டிங் தரவரிசையில் ஓப்பனிங் வீரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் சூர்யா யாதவ் ஆகியோரும், அவர்களை தொடர்ந்து குயின்டன் டி காக், இஷான் கிஸான், ஹர்திக் பாண்ட்யா, கீரோன் பொல்லார்ட், குர்ணல் பாண்டியா ஆகியோர் களம் இறக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, நாதன் கவுண்டர் நைல், ட்ரெண்ட் போல்ட் ஆகியோரும் சுழற்பந்து வீச்சாளாராக ராகுல் சாஹர் இருக்கிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வரும் மும்பை அணியின் ப்ளேயிங் லெவன் குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பகிர்ந்துள்ளார்.

image


Advertisement

இது குறித்து அவர் கூறும் போது “ மும்பை அணியானது இரண்டு இடங்களில் பலவீனமாக இருக்கிறது. அதில் ஒன்று அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது. காரணம் சுழற் பந்து வீச்சாளராக சாஹர் மட்டுமே இருக்கிறார். இவர்களைத் தவிர ஹர்திக் பாண்ட்யா மற்றும் அனுகுல் ராய் ஆகியோர் விக்கெட்டுகளை கைப்பற்றும் திறமை கொண்டவர்களாக இருக்கின்றனர்.

image

ஆனால் துபாயில் அமைந்துள்ள மைதானமானது முழுக்க முழுக்க ஸிபின்னர்களுக்கு சாதகமாக உள்ளது. இது மட்டுமன்றி மற்ற அணிகளில் இருக்கும் அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் போல் மும்பை அணியில் வீரர்கள் இல்லை. இதனால் அதை மும்பை அணி எப்படி கையாளப் போகிறது என்பது நிச்சயம் சுவாரஸ்யமிக்கதாக இருக்கும்.


Advertisement

மற்றொரு விஷயம் பலவீனமான மிடில் ஆர்டர். மும்பை அணியினர் பேட்டிங் தரவரிசையில் 4 அல்லது 5-வது இடத்தில் களம் இறக்குபவர்களை பற்றி சிந்திக்க வேண்டும். அந்த இடத்தில் குயின்டன் டி காக் விளையாடும் பட்சத்தில் அவர் ரோகித் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவுடன் இணைவார்.

இஷான் கிஸான் 4 இடத்திலோ அல்லது தொடக்க ஆட்டக்காரராகவோ களம் காண வாய்ப்பு இருக்கிறது. கீரோன் பொல்லார்ட் 5 ஆம் இடத்தில் களம் இறங்க வாய்ப்பு இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யா 4 ஆம் இடத்தில் முன்னேறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அவர் அதில் களம் இறங்காத பட்சத்தில் அதில் யார் களம் இறங்குவார் என்ற கேள்வி எழும்.

சுனில் கவாஸ்கரின் ப்ளேயின் லெவன்:

1. ரோகித் ஷர்மா, 2. சூர்யகுமார் யாதவ், 3. குயின்டன் டி காக், 4.இஷான் கிஸான், 5. ஹர்திக் பாண்ட்யா,6.கீரோன் பொல்லார்ட்,7. குர்ணல் பாண்டியா,8.நாதன் கவுண்டர் நைல், 9. ராகுல் சாஹர் ,10. ட்ரெண்ட் போல்ட்/ மிட்செல் மெக்லெனகன். 11. பும்ரா

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement