அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ள நிலையில் சென்னையில் இன்று அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஆலோசனையில் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
அடுத்த தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் வேறுபட்ட கருத்துகளை தெரிவிக்க தொடங்கிய பிறகு கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். வருகிற சட்டமன்றத் தேர்தல் குறித்தும், அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும் என ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி