நான் சண்டைகளை தொடங்குவதில்லை, இதை நிரூபித்தால் ட்விட்டரிலிருந்து விலகுவேன்: கங்கனா ரனாவத்

Kangana-Ranaut-says-she-is-never-one-to-start-fights-----I-will-quit-Twitter-if-anyone-can-prove-otherwise---

சிவசேனா முதல் நடிகை ஊர்மிளாவரை, கங்கனா ரனாவத் இப்போது பலருடனும் பல தளங்களில் சண்டையில் ஈடுபட்டுள்ளார். “இருப்பினும் தான் ஒருபோதும் சண்டையைத் தொடங்குவதில்லை, முடித்து வைக்கிறேன். என் தவறு நிரூபிக்கப்பட்டால் ட்விட்டரில் இருந்து விலகுவேன்” என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார்


Advertisement

image

இது குறித்து கங்கனா ரனாவத் " நான் ஒருபோதும் சண்டையைத் தொடங்க மாட்டேன், ஆனால் ஒவ்வொரு சண்டையையும் முடிக்கிறேன். யாராவது உங்களை எதிர்த்துப் போராடும்போது அவர்களை மறுக்கக் கூடாது என்று கிருஷ்ணர் கூறியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.


Advertisement

கங்கனாவின் சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசம்தான் போதைப்பொருள்களின் பிறப்பிடம், அதனால் அவர் அங்கு முதலில் போதைப்பொருள் பிரச்னையை சரிபார்க்குமாறு ஊர்மிளா, கங்கனாவிடம் கூறிய பிறகு “ஊர்மிளா தன் நடிப்பு திறமையால் வெளியில் தெரியவில்லை அவர் ஒரு ‘மென்மையான ஆபாச நட்சத்திரம்’ என்று கங்கனா பதிலடி கொடுத்தார்.

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுடன் மோதலில் ஈடுபட்ட கங்கனா அவரை ‘தனது போராட்டத்தை இழிவுபடுத்த விரும்பிய முட்டாள்’ என்று அழைத்தபோது “ உங்களுக்கு ஏன் மத்திய அரசிடமிருந்து ஒய்-பிளஸ் பாதுகாப்பு தேவை” என்று கம்ரா கேள்வி எழுப்பினார். அனுராக் காஷ்யப் கங்கனாவிடம், ‘ஒரு உண்மையான மணிகர்னிகா’ என்று நீங்கள் உங்களை நம்பினால், சீனாவுக்கு எதிராக இந்தியாவுக்காக போராடுமாறு கூறினார். கங்கனா தன்னை ஒரு போர்வீரன் என்று அழைத்துக் கொண்ட ஒரு ட்வீட்டுக்கு அவர் இப்படி பதிலளித்தார். இதற்கு பதில் கூறிய கங்கனா “நீங்கள் உருவகங்களை உண்மையாக எடுத்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எப்படி இவ்வளவு முட்டாள் ஆகிவிட்டீர்கள்? நாம் நண்பர்களாக இருந்தபோது நீங்கள் மிகவும் புத்திசாலி, ”என்று அவர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார்.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement