ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பெண்ணிடம் தங்க தாலி திருட்டு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிடம் தங்க தாலி செயின் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

மரக்காணம் பிரம்மதேசம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெயாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நள்ளிரவில் தீவிர சிகிச்சை பிரிவிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சிகிச்சை பெற்று வந்த ஜெயாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்க தாலி செயினை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டன் தன்வந்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலிசார் வழக்குப்பதிவு செய்து செயின் திருட்டில் ஈடுப்பட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement