கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.பி கொரோனா பாதிப்பால் மரணம்

BJP-Rajya-Sabha-member-Ashok-Gasti-dies-due-to-coronavirus

கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க மாநிலங்களவை உறுப்பினர் அசோக் காஸ்தி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உறுப்புகள் செயலிழப்பு காரணமாக  உயிரிழந்தார்.


Advertisement

image

அசோக் காஸ்தி இந்த ஆண்டு ஜூன் மாதம்தான் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 55 வயதான அசோக் காஸ்திக்கு செப்டம்பர் 2-ஆம் தேதி கடுமையான கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Advertisement

மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மனிஷ் ராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி “ அசோக் காஸ்தி எம்.பி, பல உறுப்பு செயலிழப்பு காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தார். அவர் எங்கள் நிபுணர் குழுவின் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் தீவிர சிகிச்சை பிரிவில்  செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு இருந்தார்" என்று கூறினார். அசோக் காஸ்தியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி  இரங்கல் தெரிவித்துள்ளார்.

அசோக் காஸ்தி ரைச்சூரில் வசிப்பவர்,  இவர் தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞராக  பணியாற்றினார், பாஜகவின் ஓபிசி பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளராக இருந்த அவர் கர்நாடக  ஓபிசி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement