உத்தரபிரதேசம் மீரட்டைச் சேர்ந்தவர் 42 வயதான அப்துல்லா. இவர் 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 3ஆம் தேதி மைனர் பெண் ஒருவர் காணாமல் போய்விட்டதாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். போலீஸ் குழுக்களாகப் பிரிந்து அந்தப் பெண்ணை தேடியபோது அவர் அப்துல்லா என்ற நபருடன் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அந்த நபரை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஐ.ஏ.என்.எஸ் அறிக்கைப்படி, அப்துல்லாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று மனைவிகள் மற்றும் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். அவர் ஃபேஸ்புக்கில் அமன் சௌத்ரி என்ற பெயரில் புதிய கணக்கைத் தொடங்கி, அதில் தன் வயதைக் குறைத்துக் காண்பிக்க விக் வைத்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டிருக்கிறார். ஃபேஸ்புக்கில் அறிமுகமான மைனர் பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி திருமணமும் செய்துகொள்வதாகக் கூறியிருக்கிறார்.
उप्र के मेरठ में पुलिस की गिरफ्त में आया नकली बाल वाला अब्दुल्ला...pic.twitter.com/tGlv9N7o1c— Sachin Gupta | सचिन गुप्ता (@sachingupta787) September 16, 2020
அப்துல்லா அந்த பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் போலீஸாரிடம் கூறியிருக்கிறார். அந்த பெண்ணை மீட்ட போலீஸார் குடும்பத்தாருடன் அனுப்பி வைத்திருக்கின்றனர்.
மேலும், சிறுபெண்ணை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பின்பு சிறையில் அடைக்கப்படுவார் என்று மீரட் எஸ்.பி அகிலேஷ் நரேன் கூறியுள்ளார்.
Loading More post
கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 மாநிலங்களின் விவரம்!
சென்னை: கொரோனா விதிமீறல்; திறப்புவிழா அன்றே சீல் வைக்கப்பட்ட பிரியாணி கடை
RCB vs KKR : டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
"முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை" - தமிழக அரசு தகவல்
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி