வண்டியை திருடி தள்ளிக் கொண்டே சென்றவரை திருடிய சில மணித்துளிகளில் மடக்கி பிடித்த காவல்துறையினர்.
திருவெறும்பூர் துவாக்குடி மலையை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் திருச்சி ஜங்ஷன் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, கொஞ்சம் தூரம் நகர்ந்து போய் பேசிக்கொண்டு இருந்தார், 10 நிமிடம் கழித்து வண்டி நிறுத்தி இருந்த இடத்தை திரும்பிப் பார்த்தபோது அங்கு அவருடைய வண்டி இல்லை. உடனடியாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் தனது வண்டி காணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்தார்.
புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் அருகில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து அலுவல் அதிகாரி நாராயணராவ் பட்டாலியன் அருகே வாகனத்தை ஒருநபர் தள்ளிக்கொண்டு வருவதை கண்டு தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டதில் எடமலைப்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த தாமஸ் என்பதும், சரவணகுமாரின் இருசக்கர வாகனத்திற்கு சாவி இல்லாததால் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தள்ளிக்கொண்டே வந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து வாகனத்தை கைப்பற்றிய போலீசார் அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சம்பந்தப்பட்ட நபர் இதுபோன்று எவ்வளவு நாட்களாக இருசக்கர வாகனத்தை திருடி வருகிறார், இவருக்கும் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?