புற்றுநோயாளி பெண் ஒருவருக்கு செவிலியர் ஒருவர் கண்ணீருடன் உருக்கமாக பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி நெகிழ வைத்துள்ளது.
ஆளைக்கொல்லும் ஆபத்தான நோய்கள் என்றில்லை சாதாரண காய்ச்சல் என்றாலே மருந்து, மாத்திரைகள் ஒருபுறம் குணமாக்கினாலும் உறவினர்கள் மற்றும் சுற்றியுள்ள சமூகத்தினரின் கனிவான பார்வையும் தன்னம்பிக்கையான வார்த்தைகளும்தான் நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கும் உந்து சக்தி. அப்படியொரு உந்து சக்தியை கொடுக்கும் பெண் செவிலியர் ஒருவர் புற்றுநோய் பாதித்த பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு பாடும் வீடியோவை பி.ஆர்.எஃப்.சி ஹாக்கின்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
நேற்று பகிர்ந்த அந்த வீடியோவில்தான் ”புற்றுநோய் முற்றிய வயதான பெண் ஒருவருக்கு சிகிச்சையளிக்கும் இளம் பெண் செவிலியர் மெலோடி பாட்டை பாடுகிறார். அதாவது பின்னால் பாடல் ஒலிக்கிறது அதற்கேற்ப அந்த செவிலியர் உருக்கமாக பாடுகிறார். பாடும் போது இடையிடையே உணர்ச்சி மிகுதியால் தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொள்கிறார். செவிலியர் பாடும்போது படுக்கையில் இருந்தபடியே அவரது கையைப் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு வயதான புற்றுநோய் பாதித்த பெண்ணும் உருக்கமாக உணர்வுப்பூர்வமாக சேர்ந்து பாடுகிறார்.
A nurse singing to a woman with terminal cancer
The most beautiful thing you are going to see today ❤️
Remember guys there are so many amazing people in this world ❤️ pic.twitter.com/AL9jw7rcPP — ⚽ Simon BRFC Hopkins ⚽ (@HopkinsBRFC) September 16, 2020
தன்னம்பிக்கையூட்டும் இந்த வீடியோ ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு பாராட்டுகளை குவித்து வருகிறது.
Loading More post
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி