”20 வயது மகளை 60 வயது ஜவுளிக்கடை அதிபர் ஏமாற்றி அழைத்து சென்றுவிட்டார்” தாய் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கிருஷ்ணகிரியில் 20 வயது இளம் பெண்ணை 60 வயது ஜவுளிக்கடை அதிபர் கடத்தி சென்றுவிட்டதாக அப்பெண்ணின் தாயார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.


Advertisement

 image

 கிருஷ்ணகிரி தர்மராஜா நகர் பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் நான் கணவனால் கைவிடப்பட்ட பெண், எனக்கு 20 வயதில் சோனி என்ற மகள் உள்ளார். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஜவுளி கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.


Advertisement

 image

 இந்த நிலையில், கடந்த 14ம் தேதி ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றவர், அன்று மாலை தொலைபேசி மூலம் எண்ணை தொடர்புகொண்டு தான் பணி புரியும் ஜவுளி கடை உரிமையாளர் செல்வம் என்பவருடன் இருக்கிறேன். என்னை தேட வேண்டாம் என கூறிவிட்டு செல்போனை ஆப் செய்துவிட்டார்.

 


Advertisement

image

இது தொடர்பாக நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். தொடர்ந்து ஜவுளி கடை உரிமையாளர் குறித்து விசாரிக்கையில் அவர் 60 வயது நபர் என்றும் திருமணம் ஆகாமல் பல பெண்களை ஏமாற்றி வருபவர் என்றும் தெரியவந்துள்ளது. ஆகவே என் மகளை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்ற அந்த நபரிடம் இருந்து மகளை மீட்டுத்தர வேண்டும் என மனுவில் குறுப்பிட்டு இருந்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement