தற்செயலாக ஏ.கே-47 துப்பாக்கி வெடித்ததில் இளம் காவல்துறை அதிகாரி மரணம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தெலங்கானாவில் பத்ராட்ரி கோத்தகுடேம் மாவட்டத்தில் நேற்று மாவோயிஸ்ட் தேடுதல் நடவடிக்கைகளின்போது ஏகே 47 துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் 25 வயது சப் இன்ஸ்பெக்டர் மரணமடைந்தார்.


Advertisement

image

பத்ராட்ரி கோத்தகுடேம் மாவட்டத்தின் செர்லா மண்டலத்தில் உள்ள சென்னபுரம் வனப்பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ரிசர்வ் சப்-இன்ஸ்பெக்டர் (ஆர்.எஸ்.ஐ) ஆதித்யா சாய் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பத்ராச்சலம் பகுதி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.


Advertisement

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் தத் கூறுகையில் “இந்த அதிகாரி மற்ற காவல்துறையினருடன் சேர்ந்து மாவோயிஸ்ட் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது இந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்று கூறினார். இதற்கிடையில், பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகள் இருப்பதைப் பற்றிய தகவல்களைத் தொடர்ந்து சத்தீஸ்கர் எல்லையில் உள்ள மாவட்டங்களில் தெலங்கானா போலீசார் தொடர்ந்து தேடுதல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement