பிரதமர் மோடி பிறந்தநாள்: தமிழக தலைவர்கள் வாழ்த்து…!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், கமல் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

image

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டர் பதிவில் “ வரும் ஆண்டு சிறப்பானதாக அமைய பிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவர் பல்லாண்டு காலம் நல்ல உடல் நலத்துடன் நாட்டுக்கு சேவை செய்ய பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


Advertisement

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள பதிவில் “ பிரதமர் நல்ல உடல் நலத்துடன் அவரது இலட்சியத்தில் வெற்றிபெறவும், முன்னெப்போதும் இல்லாத உயரங்களுக்கு நாட்டின் வளர்ச்சியை கொண்டு செல்லவும் பிறந்தநாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் “ நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டுகாலம் வாழவும், நாட்டுக்கு சேவையாற்றவும் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தனது பதிவில் “இந்த கடினமான காலங்களில் நாட்டை உயர்த்துவதற்கான ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வலிமை ஆகியவற்றை பெற பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement