சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


Advertisement

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிஜார் அலி. இவர் அதே பகுதியில் உள்ள 12 வயது சிறுவனுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுவனின் பெற்றோர் மதுரை மாநகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், நிஜார் அலி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு மதுரை மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இளைஞர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து இளைஞருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து குற்றவாளியை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement