சாதிய மதவாத சக்திகளுடன் விசிக கூட்டணி வைக்காது - திருமாவளவன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேர்தலில் சாதிய மதவாத சக்திகளுடன் விசிக கூட்டணி வைக்காது என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து புதியதலைமுறைக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணலில் “திமுக கூட்டணியில் நல்லிணக்கத்துடன் விசிக உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. திமுக கூட்டணி அகில இந்திய அளவில் சக்தி பெற வேண்டும். வலிமை பெற வேண்டும் என்ற உணர்வோடு இருக்கிறோம். அதில் கேள்விகளுக்கே இடமில்லை. தேர்தலில் பாஜக பாமக அல்லாத கட்சியில்தான் கூட்டணி என்ற முடிவு நன்கு சிந்தித்து, தொலைநோக்கு பார்வையுடன் எடுக்கப்பட்ட முடிவு. இதில் தேர்தலுக்கு தேர்தல் நாங்கள் மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

image


Advertisement

சாதிய, மதவாத சக்திகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்போதும் கூட்டணி வைக்காது. இதில் நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம். அந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.  மக்களிடையே இருக்கும் பிளவை பயன்படுத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடும் நிலைப்பாட்டை நாங்கள் எடுக்கவில்ல. எடுக்கவும் மாட்டோம்.” எனத் தெரிவித்தார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement