பிந்து மாதவியின் 'யாருக்கும் அஞ்சேல்' ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிந்து மாதவி நடிப்பில் உருவாகியுள்ள 'யாருக்கும் அஞ்சேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் விஜய் சேதுபதி.


Advertisement

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்தைத் தொடர்ந்து முழுக்க பெண்களை மையப்படுத்தி த்ரில்லர் படமொன்றை இயக்கினார் ரஞ்சித் ஜெயக்கொடி. இதன் படப்பிடிப்பை ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக முடித்துவிட்டுத் திரும்பினார்.

பிந்து மாதவி மற்றும் தர்ஷனா பானி இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு 'யாருக்கும் அஞ்சேல்' என்று தலைப்பிட்டது படக்குழு. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றது.


Advertisement

தற்போது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து படக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படத்தின் டீஸர் விரைவில் வெளியாக இருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement