[X] Close >

சோனு சூட்டிடம் பாஜகவில் எம்.எல்.ஏ சீட்டு வாங்கிக் கொடுக்கும்படி உதவி கேட்ட ரசிகர்!

Fan-who-helped-Sonu-suit-to-buy-MLA-ticket-in-BJP-

நடிகர் சோனு சூட்டிடம் பீகார் தேர்தலில் பாஜகவில் எம்.எல்.ஏ சீட்டு வாங்கிக்கொடுக்கும்படி ரசிகர் ஒருவர் உதவி கேட்டுள்ளார்


Advertisement

கொரோனாவால் கடந்த 22 ஆம் தேதி முதல் நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வந்தார். இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு பேருந்து, ரயில், விமானங்கள் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

image


Advertisement

அதோடு, சமூக வலைதளங்களில் கோரிக்கை வைத்தவர்களுக்கும் டிராக்டர் வாங்கிக்கொடுப்பது, மருந்துகள் அனுப்பி வைப்பது, வீடு கட்டிக் கொடுத்தது, வேலை வாங்கிக்கொடுத்தது என்று தொடர்ச்சியாக உதவிகள் செய்து வருகிறார். கொரோனா ஊரடங்குகள் நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டாலும் சோனு சூட்டிடம் உதவி கேட்பதை மட்டும் இன்னும் நிறுத்தவில்லை. அந்த உதவிகள் என்பது நாளுக்குநாள் வித்தியாசமானதாகவும் இருந்து வருகிறது.

அப்படித்தான் இன்று சோனு சூட்டிடம் வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ சீட் வாங்கிக்கொடுக்கும்படி ட்விட்டரில் ஒருவர் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு சோனு சூட், “நான் பஸ், ரயில், விமாங்களுக்குத்தான் டிக்கெட் ஏற்பாடு செய்ய முடியும். அரசியல் கட்சிகளில் எப்படி சீட்டு வாங்கிக் கொடுப்பது என்று எனக்கு தெரியாது." என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close