புதுச்சேரியில் வீட்டில் ஆசையாக வளர்த்த பூனைக்கு, வீட்டின் உரிமையாளர் வளைகாப்பு விழா நடத்திய நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
புதுச்சேரி மாநிலம் மூலக்குளத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்த வீட்டின் உரிமையாளர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து தான் ஆசையாக வளர்த்த செல்லப் பிராணியான பூனைக்கு வளைகாப்பு நடத்தினார்.
அந்த பூனைக்கு பூமாலை அணிவித்து ஒரு பெண்ணுக்கு நலங்கு சுற்றுவதுபோல் நலங்கு வைத்து வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடத்தியது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீட்டில் இருந்த சிறுமிகளும் பூனைக்கு நலங்கு வைத்து மகிழ்ந்தனர்.7 வகையான தட்டுகளில் நலங்கு பொருட்கள், பூனைக்கு பிடித்த உணவுகளையும் வைத்திருந்தனர். மறுநாளே அந்த பூனை அழகான 4 பூனை குட்டிகளை ஈன்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் வளர்க்கும் பிராணிகளை குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பாவித்து வளைகாப்பு விழா நடத்திய நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!