பிறந்து 12 நாளே ஆனக் குழந்தையை தாக்கி கொன்ற வளர்ப்பு நாய்:அலட்சியத்திற்காக பெற்றோர் கைது

Pet-dog-kills-12-day-old-baby--Parents-arrested-for-negligence

இங்கிலாந்தில் பிறந்து 12 நாளே ஆன குழந்தையை, வீட்டில் வளர்த்த நாயே தாக்கி கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

செல்லப் பிராணிகளான நாய், பூனை என்றாலே எல்லோருக்கும் கொள்ளைப் பிரியம்தான். அதனால், வீடுகளில் தங்களுக்குப் பிடித்த இன நாய்களை வாங்கி வளர்க்கிறார்கள். அதுவும், குழந்தைகள் இருக்கும் வீட்டில் நாய்கள் வளர்த்தாலே குதூகலம்தான். ஏனென்றால், நாய்கள் குழந்தைகளுக்கு நண்பனாகவும் குழந்தைகளை மகிழ்விப்பவையாகவும் மாறிவிடுகின்றன.

image


Advertisement

வளர்ப்பு நாய்கள் குறித்த பாஸிட்டிவான எண்ணம் கொண்டிருக்கும் நிலையில்தான், இங்கிலாந்தில் பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையை வீட்டின் வளர்ப்பு நாயே தாக்கி கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையை நாய் தாக்கி பலத்த காயம் ஏற்பட்டவுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால், அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.

ஆனால், குழந்தையை பாதுகாப்பதில் அலட்சியமாக  இருந்ததற்காக அதன் பெற்றோர் ஸ்டீபன் ஜாய்ன்ஸ் மற்றும் தாய் அபிகெய்ஸ் எல்லிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குழந்தையை தாக்கி கொலை செய்த நாயை காவல்துறை வந்து பிடித்துச்சென்றுள்ளனர். ஆனால், நாயை மூன்று காவலர்கள் இழுத்தும் இழுக்க அவ்வளவு சிரமமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்கள்.

Courtesy: https://www.theguardian.com/uk-news/2020/sep/15/two-people-arrested-after-dog-kills-12-day-old-baby-in-doncaster


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement