[X] Close >

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: ரவி சாஸ்திரிக்கு அதிக வாய்ப்பு

Ravi-Shastri-has-higher-chance-to-become-Indian-coach

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  


Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி முறைப்படி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 55 வயதான ரவி சாஸ்திரி, 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளர் தேர்வு வரும் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. முன்னாள் வீரர்கள் வெங்கடேஷ் பிரசாத், வீரேந்திர சேவாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் டாம் மூடி உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். கேப்டன் கோலி மற்றும் சகவீரர்களின் ஆதரவுடன், கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் சச்சின் டெண்டுல்கரின் ஆதரவும் ரவி சாஸ்திரிக்கு இருப்பதால், அடுத்த பயிற்சியாளராக அவர் நியமிக்கப்படவே வாய்ப்புகள் இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close