பாம்பை முகக் கவசமாக அணிந்து பஸ்சில் பயணித்த நபர் 

The-person-who-traveled-on-the-bus-wearing-a-snake-AS-mask-TO-PREVENT-COVID-SPREAD

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் வீட்டை விட்டு வெளியிடங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என வலியுறுத்தியுள்ளது உலக பொது சுகாதார மையம். 


Advertisement

image

அதனை உலக நாடுகள் அனைத்தும் முறையாக பின்பற்றி வரும் நிலையில் இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் வசிக்கின்ற நபர் ஒருவர், பாம்பை முகக்கவசம்போல கழுத்து மற்றும் வாய் பகுதியில் மூடியிருக்கும் வகையில் வைத்து கொண்டு பேருந்தில் பயணம் மேற்கொண்டு கிலி ஏற்படுத்தியுள்ளார். 


Advertisement

‘முதலில் அதை பார்த்தபோது பேன்சியாக மாஸ்க் அணிந்து கொண்டிருக்கிறார் என்று தான் நினைத்தேன். ஆனால் பஸ் புறப்பட்டதும் தான் அது பாம்பு என தெரிந்தது. 

அவர் கழுத்து பகுதியை சுற்றியிருந்த அந்த பாம்பு பேருந்தின் கைப்பிடியில் நெளிந்தது’ என சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

அந்த நபர் பேருந்தில் எடுத்து வந்த பாம்பு பார்க்க மலைப்பாம்பு போல உள்ளது. 

இதனையடுத்து இங்கிலாந்து போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்தில் பயணம் செய்கின்ற பயணிகள் துணியினாலான முகக்கவசத்தை மட்டுமே அணியுமாறு அறிவித்துள்ளது. 

Courtesy: https://www.independent.co.uk/news/uk/home-news/covid-19-snake-face-mask-manchester-bus-swinton-coronavirus-b448726.html

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement