ஆமையை விழுங்க முயன்ற முதலை - வைரல் வீடியோ

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஆமை ஓடு மிகவும் வலிமையானது என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் எவ்வளவு வலிமையானது என தெரியாது. ஒரு முதலையின் தாடையைவிட வலிமையானதா என்ற கேள்விக்கு பதில் தருகிறது ஒரு வீடியோ.


Advertisement

இந்திய வருவாய் சேவை அதிகாரி நவீத் ட்ரம்பூ, சுவாரஸ்யமான வீடியோ க்ளிப் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ’’இந்த உலகில் வாழ கடினமான தோலும், வலிமையான புத்தியும் தேவை. நீங்கள் இடம் கொடுக்காவிட்டால் யாரும் உங்களை உடைத்துவிட முடியாது - யாரோ’’ என்ற வாசகத்தையும் எழுதியுள்ளார்.

வெறும் 18 நொடிகள் மட்டுமே வரும் அந்த வீடியோவில், முதலை ஒன்று ஆமையை விழுங்க முயற்சிக்கிறது. அதன் தாடை வலிமையைக்கொண்டு ஆமை ஓட்டை உடைக்க முயற்சிக்கிறது. ஆனால் முதலையால் முடியவில்லை. இறுதியில் முதலையிடமிருந்து ஆமை சாதுர்யமாக தப்பித்து சென்றுவிடுகிறது.

இந்த வீடியோவை 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். பலரும் தங்கள் கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.


Advertisement

 

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement