ஒவ்வொருவரும் உலக சுகாதாரப் பாதுகாப்புக்கு வருடத்திற்கு 5 டாலர்(ரூ.368) சேமித்தாலே ஐந்து வருடத்திற்குப் பிறகு வரும் பேரழிவை சந்திக்க தயாராக இருக்கமுடியும் என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைவர் க்ரோ ஹார்லெம் தெரிவித்துள்ளார்.
நார்வேயின் முன்னாள் பிரதமரும், உலகளாவிய ஆயத்த கண்காணிப்பு வாரியத்தின்(Global Preparedness Monitoring Board) இயக்குநர்களில் ஒருவருமான க்ரோ ஹார்லெம் புருட்லாண்ட் தற்போது பரவிக்கொண்டிருக்கும் நோய்த்தொற்று பற்றி சில கருத்துக்களை முன்வைத்துள்ளார். முன்பே நாம் பாதுகாப்பாகவும், முன்னெச்சரிக்கையுடனும் இல்லாததால்தான் அதன் விலையை செலுத்திக்கொண்டிருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
“கடந்த ஆண்டே உலக அளவில் பலவித சுகாதாரப் பிரச்னைகளும், நோய்க்கிருமிகளும் பரவி வருவதாக உலகளாவிய ஆயத்த கண்காணிப்பு வாரியம் எச்சரித்தது. இந்த நோய்க்கிருமி மிகவும் ஆபத்தானது என்பதை முன்கூட்டியே அறிந்துதான் எச்சரித்தோம். முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பதை கொரோனா தற்போது உறுதிப்படுத்தி உள்ளது” என ஏற்கனவே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், “சரியான வழிநடத்துதல் இல்லாமல் இருப்பதால் அடுத்த சமூகப்பரவல் கண்டிப்பாக சீக்கிரத்தில் வரப்போகிறது. அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்கு பதிலாக ஆபத்தான நோய்க்கிருமியை வழங்கிக்கொண்டிருக்கிறோம். இது சமூகத்தின் நிலையை இன்னும் மோசமாக்கும். கொரோனா தடுப்பூசி தயாரிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்வர மறுத்துவிட்டார். அப்படியே தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்பட்டாலும், மற்ற நாடுகளில் நோய்த்தொற்றின் நிலை மோசமாக இருக்கும். எப்படியும் 2021 முடிவதற்குள் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும்” என கூறியிருக்கிறது.
Loading More post
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
தஞ்சை: பெரியார் சிலைக்கு காவி சால்வை மற்றும் குல்லா அணிவித்த மர்ம நபர்கள்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி